Posts

நான்கு திருத்தல யாத்திரை.!

Image
வணக்கங்கள் நண்பர்களே.! இரண்டுவார CHAR DHAM பயணத்தில் பெற்ற அதிர்வுகளும்,பரவசமும் ஏனோ இன்னுமும் அடங்கவேயில்லை.வழக்கமான உலகிற்கு வரவே இயலவில்லை. என்னதான் காரணம் என யோசித்ததில் பெரிதாக விடை ஏதும் கிடைக்கவில்லை என்றாலும்கூட,இதில் இருந்து மீள சின்னதாய் ஒரு வழி கிடைத்தது.  ஒரு சதுரஅடி கூட சமதளம் இல்லாத...உலகின் உயரமான பிரம்மாண்ட மலைதொடர்களில் சுமார் 2000 கிலோமீட்டர்கள்...சிக்கல் விழுந்த நூல்கண்டு போல வளைந்து நெளிந்து முடிவேயில்லாத சாலையில் பயணித்து சேகரித்து வந்த ஒரு பொருளின் சுமையை இறக்கிவைப்பதன் மூலமாக அந்த வழி பிறக்கும் என நம்புகிறேன். அந்த பொருள் எல்லா உயிர்களுக்கும் ஜீவநாடியான தண்ணீர்.! இந்த நான்கு புண்ணியதளத்திலும் உறவினர்களுக்கு வாங்கிவர,திருப்பதி லட்டு போல...பழனி பஞ்சாமிர்தம் போல...சபரிமலை சந்தனம் போல எதுவுமில்லை.இயற்கையான நீரோட்டமும்,பாறையுமே வழிபாட்டுகுறியவை. அங்கு பிரசாதமே....கொண்டுவந்து தரவேண்டிய பொருளே அங்கு பிரவாகமெடுத்து ஓடும் புண்ணிய நதிகளின் சில துளிகளே...அந்த புனிததீர்த்தமே பூஜிக்க வேண்டியவை என பயணத்தின் துவக்கத்திலேயே (என்னளவில்) புரிந்து  கொண்டுவிட்டேன்.